விளையாடுவது எப்படி?
தொடு கட்டுப்பாடு
திரையைத் தட்டி உன் கதாபாத்திரத்தைக் கட்டுப்படுத்து.
முக அசைவுக் கட்டுப்பாடு
முக அசைவுகளாலும் விளையாடலாம்! வாயையோ கண்களையோ அல்லது இரண்டையுமோ பயன்படுத்தி உன் கதாபாத்திரத்தைக் கட்டுப்படுத்து. கேமில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி முக அசைவுக் கட்டுப்பாட்டை ஆன் செய். அப்புறம் கைகளைப் பயன்படுத்தாமலேயே விளையாடலாம்!
சிக்கல்களும் தீர்வுகளும்
பொதுவான சிக்கல்கள்
- முக அசைவுக் கட்டுப்பாடு சரியாக வேலை செய்யவில்லையா? உன் சாதனத்தின் கேமரா சரியாக வேலை செய்கிறதா, போதுமான வெளிச்சம் இருக்கிறதா என்று பார். வெளிச்சம் குறைவாக இருந்தால் கேமராவால் உன் முகத்தைச் சரியாகக் கண்டறிய முடியாமல் போகலாம். சாதனம் உன் முகத்துக்கு நேராக இருப்பதையும் உறுதிசெய்.
- கேம் மெதுவாகிறதா, அப்படியே நின்றுவிடுகிறதா? அதிக வளங்களைப் பயன்படுத்தும் வேறு செயலிகள் பின்னணியில் இயங்குகின்றனவா என்று பார். இயங்கினால் அவற்றை மூடு.
- அடிக்கடி விளம்பரம் வருகிறதா? கேமை இலவசமாகத் தர விளம்பரங்கள் உதவுகின்றன. அளவோடு காட்ட முயல்கிறோம். ‘விளம்பரம் ரொம்ப அதிகம்’ என்று தோன்றினால், தயங்காமல் எங்களிடம் சொல்!
விளம்பரங்களும் கேமுக்குள் வாங்குதல்களும்
Blinky Run கேமை இலவசமாக விளையாடலாம். விருப்பமிருந்தால் “விளம்பரமின்றி”, “வண்ணத் தொகுப்பு”, “முழுத் தொகுப்பு” ஆகியவற்றை வாங்கலாம். “விளம்பரமின்றி” அல்லது “முழுத் தொகுப்பு” வாங்கினால் விளம்பரங்கள் முடக்கப்படும். iPhone மற்றும் iPad சாதனங்களில் வாங்குதல்களை Apple கையாளுகிறது. Android சாதனங்களில் Google Play கையாளுகிறது. மேலும் விவரங்களைத் தனியுரிமைக் கொள்கையில் பார்.
தொடர்பு
இன்னும் உதவி வேண்டுமா, ஏதாவது கருத்து சொல்ல விரும்புகிறாயா? எங்களை இங்கே தொடர்புகொள்:
- மின்னஞ்சல்: dylan@absil.io
உன் கருத்துகளை வரவேற்கிறோம். உதவ நாங்கள் இருக்கிறோம்!
