← எல்லா கேம்களும்

AD GAMES / ஆர்கேட் · செங்குத்துத் திரை

Aqua
Escape

சின்ன மீன். பெரிய சவால்.

Aqua Escape என்பது Blinky Run வரிசையில், அதைத் தொடர்ந்து வந்த கேம். இன்னும் எளிதாக விளையாடக்கூடிய மாற்றாக இதை உருவாக்கினோம். Blinky Run போலல்லாமல், Aqua Escape கேமை மொபைலை நிமிர்த்திப் பிடித்து விளையாடலாம். அதனால் சட்டென்று விளையாட ஆரம்பிக்கலாம். பழகுவது சுலபம், ஆனால் சவாலுக்குக் குறைவில்லை. கொஞ்ச நேரத்துக்குள் ஏகப்பட்ட முறை கண் சிமிட்ட வேண்டியிருந்ததால், கண் கட்டுப்பாட்டை நீக்கினோம்.

முதல் வெளியீடு 16 டிசம்பர் 2024

Aqua Escape கேமின் ஓவியம்
விளையாட்டு வழிகாட்டிதனியுரிமைக் கொள்கை

விளையாடுவது எப்படி?

தொடு கட்டுப்பாடு

திரையைத் தட்டி உன் கதாபாத்திரத்தைக் கட்டுப்படுத்து.

முக அசைவுக் கட்டுப்பாடு

முக அசைவுகளாலும் விளையாடலாம்! வாயைத் திறந்து உன் கதாபாத்திரத்தைக் கட்டுப்படுத்து. கேமில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி முக அசைவுக் கட்டுப்பாட்டை ஆன் செய். அப்புறம் கைகளைப் பயன்படுத்தாமலேயே விளையாடலாம்!

சிக்கல்களும் தீர்வுகளும்

பொதுவான சிக்கல்கள்

  • முக அசைவுக் கட்டுப்பாடு சரியாக வேலை செய்யவில்லையா? உன் சாதனத்தின் கேமரா சரியாக வேலை செய்கிறதா, போதுமான வெளிச்சம் இருக்கிறதா என்று பார். வெளிச்சம் குறைவாக இருந்தால் கேமராவால் உன் முகத்தைச் சரியாகக் கண்டறிய முடியாமல் போகலாம். சாதனம் உன் முகத்துக்கு நேராக இருப்பதையும் உறுதிசெய்.
  • கேம் மெதுவாகிறதா, அப்படியே நின்றுவிடுகிறதா? அதிக வளங்களைப் பயன்படுத்தும் வேறு செயலிகள் பின்னணியில் இயங்குகின்றனவா என்று பார். இயங்கினால் அவற்றை மூடு.
  • அடிக்கடி விளம்பரம் வருகிறதா? கேமை இலவசமாகத் தர விளம்பரங்கள் உதவுகின்றன. அளவோடு காட்ட முயல்கிறோம். ‘விளம்பரம் ரொம்ப அதிகம்’ என்று தோன்றினால், தயங்காமல் எங்களிடம் சொல்!

விளம்பரங்களும் கேமுக்குள் வாங்குதல்களும்

Aqua Escape கேமை இலவசமாக விளையாடலாம். விருப்பமிருந்தால் “விளம்பரமின்றி”, “ஸ்கின் தொகுப்பு”, “முழுத் தொகுப்பு” ஆகியவற்றை வாங்கலாம். “விளம்பரமின்றி” அல்லது “முழுத் தொகுப்பு” வாங்கினால் விளம்பரங்கள் முடக்கப்படும். iPhone மற்றும் iPad சாதனங்களில் வாங்குதல்களை Apple கையாளுகிறது. Android சாதனங்களில் Google Play கையாளுகிறது. மேலும் விவரங்களைத் தனியுரிமைக் கொள்கையில் பார்.

தொடர்பு

இன்னும் உதவி வேண்டுமா, ஏதாவது கருத்து சொல்ல விரும்புகிறாயா? எங்களை இங்கே தொடர்புகொள்:

உன் கருத்துகளை வரவேற்கிறோம். உதவ நாங்கள் இருக்கிறோம்!